விஷக்குளவி கொட்டியதால் தொழிலாளி பலி : 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் !

கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது50). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே உள்ள முட்புதர் இருந்தது அதை சுத்தம் செய்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த பனை மரத்தின் காய்ந்த ஓலை ஒன்று கீழே விழுந்தது. அதில் இருந்த விஷ தன்மையுள்ள செங்குளவிகள் பறந்து வந்து மகாதேவன் மற்றும் அருகில் நின்ற அவரது இரண்டு பேரன்கள் லட்சன், திலக் ஆகியோரை கொட்டியது. இதில் அவர்கள் 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். மேலும் அவர்களது உடல்நிலையும் மிக மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து மகாதேவன் உள்பட 3 பேரையும் அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் உயிரிழந்தார். அவரது பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர். இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச