விஷவாயு தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு…!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதின் காரனமாக 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் நேற்று காலை விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 சிறுவர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் (என்டிஆர்எஃப்) முகாம் அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஷவாயுவை சுவாசித்ததால், அந்தபகுதியை சேர்ந்த மேலும் 4 நபர்கள் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 11 பேரில் 5 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கசிந்த வாயு சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் உள்ள ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விஷவாயு வெளியேறியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். ஆலையை சுற்றி 300 மீட்டர் தொலைவுக்கு வாயுக் கசிவு ஏற்பட்டதால் ப்சுற்றி இருந்த வீடுகளில் இருந்தவர்களும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் நீலநிறமாக மாறியதால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.