வீடியோவை பார்த்து மருத்துவம்…சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்

சென்னை:
சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருந்து வருகிறார். இவரது மகள் ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி சிக்கலில் சிக்கி இருந்தார்.
அந்த வகையில் தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், உடல் எடை குறைப்பு போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே ஷர்மிகா மீது விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் இரண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.