மேற்கு ஆசிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பிரதிநிதிகள், இன்று தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:வேளாண் துறை:2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கு, 185.74 லட்சம் குவிண்டால் விதைகள் கையிருப்பு உள்ளது. 166.46 லட்சம் குவிண்டால் விதைகளின் தேவைக்கு எதிராக, சுமார் 19.29 லட்சம் குவிண்டால் உபரியாக உள்ளது. நெல் (80.9 லட்சம் குவிண்டால்), சோயாபீன்ஸ் (35.7 லட்சம் குவிண்டால்), நிலக்கடலை (21.1 லட்சம் குவிண்டால்), மக்காச்சோளம் (11.9 லட்சம் குவிண்டால்) மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட முக்கியப் பயிர்களில் உபரி நிலை காணப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு காரீப் மற்றும் ராபி ஆகிய இரு பருவங்களுக்குமான விதை உள்ளீடுகளும் தயாராக உள்ளன.வேளாண் ரசாயனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். போதுமான அளவு வேளாண் ரசாயனங்கள் கையிருப்பில் உள்ளன. 2025-26 ஆம் ஆண்டில் (பிப்ரவரி 2026 வரை) வேளாண் ரசாயனங்களின் மொத்த உற்பத்தி 2,61,099 மெட்ரிக் டன்கள் ஆகும். மொத்த மதிப்பிடப்பட்ட தேவை 74,266 மெட்ரிக் டன்கள் ஆகும், இதில் சுமார் 42,000 மெட்ரிக் டன்கள் 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் தேவைப்படுகிறது.எரிசக்தி விநியோகம் மற்றும் எரிபொருள் கிடைக்கும் தன்மை:அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் அதிகத் திறனில் இயங்கி வருவதுடன், போதுமான கச்சா எண்ணெய் இருப்பும் உள்ளது. போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசலின் வழக்கமான சில்லறை விலைகளில் மாற்றம் இல்லை.வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. எல்பிஜி விநியோக மையங்களில் தட்டுப்பாடு எதுவும் பதிவாகவில்லை. எல்பிஜி சிலிண்டருக்கான இணையவழி முன்பதிவுகள் 92% ஆக அதிகரித்துள்ளன. நேற்று 60 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து செயல்பாடுகள்:மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், இந்தியத் தூதரகங்கள் மற்றும் கடல்சார் பங்குதாரர்களுடன் இணைந்து,தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியக் கொடி தாங்கிய கப்பல்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு அசம்பாவித சம்பவமும் பதிவாகவில்லை, நிலைமை சீராக உள்ளது.பிராந்தியத்தில் இந்தியர்களின் பாதுகாப்புவளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கேரள வாரியங்கள் மற்றும் ஜேஇஇ, நீட் தேர்வுகள் தொடர்பான கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உள்ளூர் அதிகாரிகள், இந்தியப் பள்ளிகள், சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் மற்றும் தேசிய தேர்வு முகமையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்றி அமையாது ஒழுக்கு. குறள் விளக்கம்: வானிலிருந்து




