வீட்டு வாடகை கொடுக்கவே மிகுந்த சிரமப்படுகிறேன் – சீமான்…

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பிரதமரால் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் எப்படி நாம் சரி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார். ஆனால் அதன்படி செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனநிலையை தற்போது மக்களிடம் உள்ளது. அதை இந்தியா கூட்டணி செய்தால் நான் மனதாக வரவேற்கிறேன். இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை வந்துள்ளது. இன்று ஊழலை பற்றி பேசுகிறார்கள். ஊழலை பற்றி பேசுபவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள் அல்ல. நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்ய முடியும். அதேபோன்று தி.மு.க. 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறது. நிறைவேற்றிய 8 சதவீத வாக்குறுதிகளையாவது அவர்கள் கூறட்டும். காலை உணவு, மதிய உணவு, பெண்களுக்கு ஆயிரம் என்று மக்களை கையேந்த வைத்தது தான் இந்த அரசின் சாதனையாகும். தேர்தலின் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் தருவதாக கூறினார்கள். இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்கிறார்கள். 3 மந்திரிகளின் ஊழல் குற்றச்சாட்டை தானாக எடுத்து விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்தை வரவேற்கிறேன். இன்று தமிழகத்தில் துப்புரவு தொழிலாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். தனிநபர் வருமானம் உயர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நானே வீட்டு வாடகை செலுத்த சிரமப்படுகிறேன். கர்நாடகாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆளுகிறது. காவிரியில் தண்ணீர் தர அந்த அரசு மறுக்கிறது. கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டியது தானே. தமிழகத்தில் நிலக்கரி வளம் நெய்வேலியில் சுரண்டப்படுகிறது . இது குறித்து நீதிபதி தண்டபாணி கவலை தெரிவித்ததை வரவேற்கிறேன். அதில் இருந்து தயாரிக்கும் இலவச மின்சாரத்தை வசாயிகளுக்கு வழங்குகிறார்கள். ஆனால் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறார்கள் . சூரிய ஒளி காற்றாலை நீர் மின்சக்தி போன்ற இயற்கை வளங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் அதை தனியார் மயமாக்குகிறார்கள். அதானியின் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு முதலீடு ரூ.4500 கோடி. இதை செய்ய தமிழக அரசுக்கு நிதி இல்லையா? இப்போது எங்கு சென்றாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. கஞ்சா போதை பொருள்கள் நடமாட்டம், மது அதிகரித்து விட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவர் இங்கு போட்டியிடவில்லை எனில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிடுவேன். நீட் தேர்வால் மருத்துவர்களின் தரம் உயருமா.?. தகுதி இல்லாத 11,12-ம் வகுப்பு எதற்கு.? அதனை நீக்கி விடலாமே. மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஏற்கனவே உள்ள மருத்துவர்களை தவிர்த்து நீட் படித்து வந்த மருத்துவர்களை தேடி பிடித்து வைத்தியம் பார்க்க செல்வாரா.? அமலாக்க துறை பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்துகிறது. தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அ.தி.மு.க. அப்போதைய அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது திட்டமிட்டு தி.மு.க. அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.