வெள்ளாடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை – வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் பராமரித்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு விட்டு ஊருக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்த போது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்