வைகை அணையில் தண்ணீர் திறப்பு…!

குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்காக மதுரை  அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டிஅ   5 மாவட்ட கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து  தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரானது, மதகுகள் வழியாக சீறிப் பாய்ந்து வைகை ஆற்றில் வெளியேறியது.  தற்போது,   விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப் பட்டு வருகிறது. தற்போது அணையில் இருந்து ஆண்டிபட்டி-சேடபட்டி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து 3 ஆயிரத்து 72 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களில் நீர் தேக்குவதற்காக வைகை அணையில் இருந்து  விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் அணையின் சிறிய மதகுகள் வழியே சீறிப் பாய்ந்து ஆற்றின் வழியே சென்றது. வரும் 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மொத் தம் 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

இதேபோல் சிவகங்கை மாவட் டத்துக்கு வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு 376 மில்லியன் கன அடி நீரும், வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 6 நாட்களுக்கு மதுரை மாவட்டத்துக்காக 209 மில்லியன் கன அடி நீரும் திறக்கப்பட உள்ளது.

மொத்தம் 15 நாட்களில் வைகை அணையில் இருந்து 1,500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.66 அடியாகவும் (மொத்த உய ரம் 71 அடி) நீர்வரத்து விநாடிக்கு 259 கன அடியாகவும் உள்ளது.

இந்த தண்ணீர் திறப்பு காரணமாக, 5 மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிப்போர் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று நீர்வளத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வைகை ஆற் றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று  அம்மாவட்ட நீர்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்