ஹைத்ராபாதில் பாஜக பெண்வேட்பாளர் செய்த காரியம் : நாடாளுமன்ற தேர்தல் 2024

ஹைதராபாத் தொகுதியில் தொடர்ந்து AIAM கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது. நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்
இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார். இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச