தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.பவன் லால் மீனா, இ.வ.ப., (Mr. Bhavan Lal Meena (IRS (C & CE)) அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி ஐ.வளர்மதி அவர்கள் முன்னிலையில், காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (19.03.2026) தேனாம்பேட்டை மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எண்:20 ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் துணைஆணையர்கள், உதவி காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி செலவு கண்காணிப்புப் பார்வையாளர்கள் குழு, கணக்கு குழு, வீடியோ பதிவு செய்யும் குழு மற்றும் இதர தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுடன் தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் பின்பற்றி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள், தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.பவன் லால் மீனா, இ.வ.ப., (Mr. Bhavan Lal Meena (IRS (C & CE)) அவர்களை தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் புகார்களுக்கு 89258 19472 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






