சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு
சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வங்கி
பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும், தேர்தல் நன்னடத்தை
விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை
ஆணையாளர் (கல்வி) திருமதி க.கற்பகம், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் வங்கி
அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (17.03.2026) ரிப்பன் கட்டட
வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வங்கி சேமிப்பு
கணக்கில் இருந்து வழக்கத்திற்கு மாறாகவோ அல்லது சந்தேகப்படும்படி ரூ.10
இலட்சத்திற்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் பெயர் விவரங்களை மாவட்ட
தேர்தல் அலுவலகம் மற்றும் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பெருந்தொகைக்கான பணத்தை சந்தேகத்திற்குரிய வகையில் திரும்பப் பெறுதல்
ஏதேனும் கவனத்திற்கு வந்தால், அதுகுறித்துத் தேவையான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும். மேலும், ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பெருந்தொகை குறித்த
தகவல்கள், வருமான வரிச் சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, மாவட்ட
தேர்தல் அலுவலரால் வருமான வரித் துறையின் ஒருங்கிணைப்பு அலுவலர் (DGIT (Inv.)
அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பொறுப்பில் உள்ள துணை ஆணையருக்குத் தகவல்
அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முகவர்கள், நிறுவனங்கள் ஆகியவை வங்கிகளில் இருந்து பணம் எடுத்து செல்லும்
போது அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஏ.டி.எம். இயந்திரங்களில்
பணம் வைக்க வாகனங்களில் செல்லும்போதோ அல்லது ஒரு கிளையில் இருந்து
வேறொரு கிளைக்கு பணம் வாகனங்களில் எடுத்து செல்லும்போதோ வாகனத்தில்
இருப்பவர்கள் அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
பல நபர்களுக்கு R.T.G.S. சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சேமிப்பு கணக்கில்
இருந்து பண பரிமாற்றம் நடைபெற்றால், அதுதொடர்பான விவரங்களை மாவட்ட
தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாகவும்,
சந்தேகத்திற்கிடமான வகையிலும் ஏதேனும் வங்கிக் கணக்கிலிருந்தோ அல்லது
வேட்பாளர் வங்கி கணக்கிலிருந்தோ அல்லது அவரை சார்ந்தவர்களது வங்கி
கணக்கிலிருந்தோ அல்லது அரசியல் கட்சி வங்கிக் கணக்கிலிருந்தோ ரூ.1இலட்சத்திற்கும் மேல் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டால் அதை உடனடியாக
மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மாவட்டத்தின் முன்னோடி வங்கி அலுவலர் நாள்தோறும் அனைத்து
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின்
தினசரி பணப்பரிவர்த்தனை விவரங்களை பெற்று தேர்தல் செலவு கண்காணிப்பு
குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.