ஏப்ரம் 19 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவினாசி பழங்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பேச இருக்கிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட திருப்பூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர், சத்தியமங்கலம், அவினாசி, கவுண்டம்பாளையம், கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு