இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது.  அதில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த உயர்க்கல்வி நிறுவனங்களுக்காக தேசிய அளவிலான பட்டியலில் கடந்த 4 ஆண்டுகளாகவே  ஐஐடி மெட்ராஸ்  முதலிடம் பிடித்திருந்த  நிலையில்,  5வது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.

பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில்  தேசிய அளவில்  ஏராளமான  கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அதன்படி சென்னை ஐஐடி முதலிடமும், அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு ஐஐஎஸ் கல்லூரியும், டெல்லி ஐஐடியும் உள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் மும்பை ஐஐடியும், ஐஐடி கான்பூரும் இடம்பெற்றுள்ளன.

இந்த தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  இடம் பிடித்துள்ள தமிழக கல்வி நிறுவனங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.  டாப் 100-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த பொறியியல் கல்லூரிகளில் திருச்சி ஐஐடி 9வது இடத்திலும்,  அண்ணா பல்கலைக்கழகம் 16 வது இடத்திலும் , கல்லூரிகளில்  சென்னை மாநிலக்கல்லூரி 3வது இடமும்,  கோவை பி.எஸ்.ஜி பெண்கள் கல்லூரி 4வது இடமும்,  சென்னை லயோலா கல்லூரி 7வது இடமும் பிடித்துள்ளது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்