புதுடெல்லி: மலோர்க்காவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி -தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் ஜோடி பட்டம் வென்றது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள மலோர்க்கா நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் யூகி பாம்ப்ரி-லாயிட் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹாசி, ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





