மதுரை சர்வதேச விமான நிலையத்தில் (AAI) வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியும், அதற்கு பணம் கேட்டும் இளைஞர்கள், வேலைதேடுபவர்களைச் சிலர் அணுகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஒருபோதும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் விண்ணப்பதாரர்களை நேரடி வேலைவாய்ப்புக்காக அணுகுவதில்லை; மேலும், ஆள்சேர்ப்புச் செயல்முறையின் எந்த நிலையிலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தை ஆணையம் கேட்காது என தெளிவுபடுத்தியுள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் உள்ள அனைத்துச் சட்டபூர்வமான வேலைவாய்ப்பு காலியிடங்களும், இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.aai.aero வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு தகவலையும், இந்த அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவே சரிபார்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.இத்தகைய மோசடியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்து, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 16: “விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே…” குறள்:விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கேபசும்புல்






