அண்மை செய்தி
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1.50 லட்சமாவது பயனாளியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் :

பூந்தமல்லி:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் 1.50 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே ஒருமுன்மாதிரியான திட்டமான “இன்னுயிர் காப்போம்- நம்மைகாக்கும் 48” எனும் திட்டத்தினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்கள். இந்தமகத்தான திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகமாக ஏற்படும் 500 இடங்கள் கண்டறியப்பட்டது. இந்த 500 இடங்களை சுற்றியிருக்கின்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் என்று 683 மருத்துவமனைகள் (அரசு மருத்துவமனைகள் -235, தனியார் மருத்துவமனைகள்-448) கண்டறியப்பட்டு இந்த “இன்னுயிர் காப்போம்- நம்மைகாக்கும் 48” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நேர்ந்தவுடன் விபத்துக்குள்ளானவர்களை இந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தால் முதல் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில்ரூ.1 லட்சம்வரை செலவிடப்பட்டு அவர்களுடைய உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாமுழுவதும் ஆண்டொன்றுக்கு சாலைவிபத்துகளினால் மரணம் அடைவேர்களின் எண்ணிக்கை 1.50 லட்சம் எனும் அளவில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுதோறும் 17,000 பேர் சாலை விபத்துகளினால் மரணம் அடையும் சூழல் நிலவுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்களை தவிர்ப்பதற்கு உடனடியாக அவர்களுக்குதேவையான பொருளாதார உதவியினை தந்து அவர்களை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்க செய்யும் இந்த மகத்தான திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இதற்குமுன்பு விபத்துகளை நேரில் பார்ப்பவர்கள் அவர்களை கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணம் இருந்தாலும் தொடர்ச்சியாக காவல்துறையினரின் விசாரணைக்குட்பட்டாக வேண்டும் என்ற எண்ணத்தினால் அவர்கள் அந்தகாரியத்தை செய்ய முன்வரமாட்டார்கள்.
எனவே அதற்கும் ஒரு தீர்வாக தமிழ்நாடு முதலமைச்சர் விபத்துகளில் சிக்குவோர்களை கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தால் ஊக்கத்தொகையாக ரூ.5000 கொடுக்கும் இந்த திட்டம் மிகச்சிறப்பான பயனைதந்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் 20.06.2022 அன்று 80,000-மாவது பயனாளி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேரடியாக சென்று பார்த்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 1 லட்சமாவது பயனாளியை 03.08.2022 அன்று, சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்றுபார்த்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. இன்று, 1.50 லட்சமாவது பயனாளியை பூந்தமல்லியில் இருக்கின்ற பனிமலர் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
பனிமலர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மைகாக்கும் 48 திட்டத்தின்படி ஏராளமான பயனாளிகளுக்கு பயன்தந்து கொண்டிருக்கின்ற மருத்துவமனையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை இம்மருத்துவமனையில் 326 பேருக்கு ரூ.22.46 லட்சம் தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,107 என்று பதிவாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த திட்டம் நல்ல பயனை தந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கடந்த 15 மாதங்களாக செலவு செய்த தொகை ரூ.132,52,81,250 ஆகும். இந்த பனிமலர் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும்மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2021 பிப்ரவரி மாதம் முதல் 15 சிகிச்சை முறைகளுடன் 237 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி பனிமலர் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செலவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரதிட்ட இயக்குநர் மரு.ச.உமா, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பிஜான் வர்கீஸ், பனிமலர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் முனைவர்.சின்னதுரை, இயக்குநர் முனைவர்.சக்திகுமார், முதல்வர் மரு.இளம்பரிதி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்