இன்று நரசிம்ம சதுர்த்தசி விரதம்: எப்படி வழிபடலாம்?

இன்று நரசிம்ம சதுர்த்தசி தினமாகும். புதன் பெருமாளை குறிப்பார். புதனுடைய ஆயில்யம் நட்சத்திரமும், சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த சிறப்பாக இன்றைய தினம் வருகிறது. இன்று விரதம் இருந்து நடராஜர், நரசிம்மரை வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று சிவன் கோவிலில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு நடராஜரை வழிபாடு செய்யலாம்.
மாலையில் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். இன்று மாலை சூரியன் மறையும் நேரமும் இரவுத் தொடக்கமும் கலந்த வேளையில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். விரதம் இருந்து நரசிம்மருடைய படத்திற்கு துளசி மாலை அணிவித்து பானகம் நைவேத்தியமாக படைத்தல் முக்கியமானது.
மாலையில் பூஜை செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம். அப்போது நரசிம்மருடைய மந்திரங்களை சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். இன்று நடராஜர் அபிஷேக தினம். வருடத்தில் 6 அபிஷேகங்கள் நடராஜருக்கு உண்டு. அதில் கடைசி அபிஷேகம் இன்று (மாசி மாதம் சுக்ல சதுர்த்தசி) நடைபெறுவதால் நடராஜமூர்த்தியைத் விரதம் இருந்து தரிசிப்பதும், “நடராஜ பத்து” முதலிய மந்திரங்களை பாராயணம் செய்வதும் அற்புதமான பலன்களை தரும்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு