இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் நடிகர் கருணாஸ்: திமுக கூட்டணிக்கு ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காமெடி நடிகர் கருணாஸ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலும் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,  வேட்புமனுத்தாக்கல்  மார்ச் 20ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக உள்பட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், திமுகவுக்கு மேலும் சில கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, காமெடி நடிகர் கருணாஸ் தனது ரசிகர்களை கொண்டு நடத்தி வரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக  நடிகர்  கருணாஸ்  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகர் கருணாஸ் மறைந்த ஜெ.முதல்வராக இருந்தபோது, அதிமுக ஆதரவில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர், அப்போது நடைபெற்ற கூவத்தூர் சம்பவத்தின்போது, அங்கு தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகைகளை சப்ளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை