இன்று நாள். 15.06.2026. நேரம். காலை. 8:00 மணி. இடம். சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
ஒரு நாளை ஆயிரக்கணக்கான நோயாளிகளும் நோயாளிகள் உதவியாளரும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்து போகும் இடத்தில் கழிவறையில் இருந்து மலம் சிறுநீர் பொங்கி வெளியே வந்து கொண்டு இருக்கிறது. இதை மிதித்து கொண்டே பாவம் நோயாளிகள் அந்த வழியாக போய் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். இதை யாரும் கவனிக்கவில்லை சரி செய்ய வில்லை. தமிழ் நாடு அரசு சுகாதார துறை அமைச்சர் உடனடியாக இந்த பதிவை பார்த்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுபோல் அரசு மருத்துவமனையில் பல இடங்களில் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை தானே பொதுமக்கள் தானே இலவச மருத்துவம் தானே என்று ஏளனம் செய்து இதுபோன்ற விஷயங்களை நிர்வாகம் கவனிப்பது இல்லை பொதுமக்கள் நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் எங்களை போன்ற ஊடகங்கள் மூலம் படம் பிடித்து தகவல் தெரிவித்தால் எங்களை அலட்சியம் செய்து வருகிறார். காலை உயிர் பிழைக்க அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வரும் நோயாளிகளுக்கு கழிவுநீர் வெளியேற்றம் மூலம் அதிகம் வியாதிகள் வந்து மேலும் உடல் நலம் சரியில்லாமல் போகவே வாய்ப்பு உள்ளது. ஆகவே சமூகநீதி குரல் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் மூலம் இந்த தகவலை பொதுமக்கள் நோயாளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சமூக நீதி குரல்

போரூர் காவல் ஆய்வாளர் எங்கே
Kalashetra matric HR சென்னை போரூர் காவல் நிலையம் டி15-எஸ். ஆர். எம்.






