ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள். முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு