உக்ரைனை தொடர்ந்து சுவீடனும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் ஆதரவு…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோ படையில் இணைவதற்கான மற்ற நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகிறது. கடந்த வாரம் துருக்கி சென்ற அவர், அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் ஆதரவு அளித்தார். இதற்கிடையே சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், துருக்கி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தது. குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இருந்தாலும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும். அதற்கான வேலையை தொடங்க எர்டோகன் உறுதி அளித்துள்ளார். துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவை துருக்கி எடுத்துள்ளது. துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளாா். மேலும், ”சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும். இது பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும்” என்றார். சுவீடன் 32-வது நாடாக நேட்டோவில் இணைகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.