புதுடெல்லி:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று 3.8.2023 புதுடெல்லியில்13வது தேசிய உறுப்பு கொடைதினத்தில் புதுடெல்லியில் ஒன்றிய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மரு.மான்சுக் மாண்டவியாவிடம் இருந்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை நிறுவனத்தால் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்கான இந்திய அளவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற விருதினை பெற்றார்.
பின்னர்செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (ழிளிஜிஜிளி) மூலம் 13வது இந்திய உறுப்பு தான தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் உறுப்புதான சிகிச்சைகள், மாற்று சிகிச்சைகள் அதேபோல் அதற்கான விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிற மாநிலங்கள் மற்றும் தனி மனிதர்கள், அமைப்புகள் என்று பல தரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அளவில் உறுப்புதான திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டிற்காக சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (ஷிளிஜிஜிளி) என்ற விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாடு, ஏற்கனவே கடந்த காலங்களில் பெற்றிருந்த இந்த சிறப்புக்குரிய தகுதியை தொடர்ந்து நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 2008ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் ஜித்தேந்திரன் என்ற மாணவன் ஒருவன் சாலை விபத்தில் மரணம் அடைந்த நேரத்தில் அவருடைய உறுப்புகளை பெற்றோர்கள் மனம் உகந்து உறுப்பு தானம் செய்தார்கள். அது அன்றைக்கு பெரிய அளவிலான செய்தியாக வந்தது, தொடர்ச்சியாக அன்றைய முதல்வர் முத்தழிழறிஞர் டாக்டர் கலைஞர், அந்த பெற்றோர்களை அழைத்து, அவர்களை கௌரவித்து, அவர்களுடைய அந்த சிறந்த குணத்திற்காக பாராட்டினார்கள்.
தற்போது தமிழ்நாட்டில் 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும், 120 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த ளிக்ஷீரீணீஸீ பிணீக்ஷீஸ்மீst லிவீநீமீஸீsமீ உள்ளது. இந்தியாவிலேயே உறுப்புதானம் அதிகமாக பெறக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இப்படி மிகச்சிறப்பான கட்டமைப்பினை பெற்றிருக்கிற காரணத்தினாலும், தொடர்ந்து இதயமாற்று அறுவைசிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணையம்மாற்று அறுவை சிகிச்சை, இதயமாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை, உறுப்பு மாற்று அறுவை கிச்சை, கருவிழி மாற்று அறுவை கிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை கிசிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் உறுப்பு மாற்று அறுவை கிச்சைகள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2008ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள். இதுவரை மொத்த உறுப்பு மாற்று பயனாளர்கள் 2008க்குப் பிறகு 1705 பேர் தந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இப்படி 1705 பேர் தந்து இருக்கின்ற உறுப்புக் கொடைகளின் மூலம் 6267 பேருக்கு பயன் அடைந்துள்ளனர். இதில் இதயம் 786 பேருக்கும், நுரையீரல் 801 பேருக்கும், கல்லீரல் 1565 பேருக்கும், சிறுநீரகம் 3046 பேருக்கும், கணையம் 37 பேருக்கும், சிறுகுடல் 6 பேருக்கும், வயிறு 2 பேருக்கும், கைகள் 4 பேருக்கும், மொத்த திசுக்கள் 3946 என்று இதுவரை 6267 உறுப்புக் கொடைகள் இன்று வரை வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 292 கொடையாளர்கள் இதுவரை உறுப்பு தானங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் அளித்த உறுப்புகளின் பயன்பாடு என்பது 1162 ஆக இருக்கிறது. எனவே அந்த வகையில் உறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஒரு இயக்கமாக மிகச் சிறப்பாக பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக உறுப்பு மாற்று, உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், அதற்கான விழிப்புணர்வு போன்ற பணிகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கின்றது.
அதனை பாராட்டும் விதமாக சிறந்த மாநிலம் விருது தந்திருக்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய அரசு சுகாதாரத்துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் சிங்பகல், மரு.பாரதி பிரவின்பவார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு மாநில உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் மரு.கோபால கிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்
பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்






