ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜென்சி எனப்படும் புதிய தலைமுறை நிரம்பிய ஒரு பேரியக்கம் என்று நம்பப்பட்ட முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஊழலை ஒழித்து தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதுதான் தமது முதன்மையான நோக்கம் என்று கூறி வருகிறது. அதனை தமிழக மக்களும் பெரிதாக நம்பி வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே ஊழலில் திளைத்து வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், ஊழல் சக்தி என்று முதல்வர் விஜயால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் பெருமளவில் சேர்த்து வருவதும், அதனை அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் பெருமையாக பேசிவருவதும் தமிழக வெற்றிக் கழகம் ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அய்யத்தை மக்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
அமைச்சர் செங்கோடையன் அதிமுகவைச் சேர்ந்த இன்னும் 10 பேர் விரைவில் தவெகவில் இணைய உள்ளனர், அந்த எண்ணிக்கை 25-ஐ தாண்டும் என்று சொல்லியிருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எத்தகைய மக்கள் சிந்தனையும் இல்லாமல் பதவியும், பணமும் மட்டுமே தங்களது குறிக்கோள் என்று செயல்பட்டுவரும் ஊழல் பெருச்சாளிகள் தவெகவில் இணைந்ததும் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்டு தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா? என்ற எதிக்கட்சிகளின் கேள்விக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
அதே போன்று தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் உண்மையே என்ற எண்ணத்தையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழக வெற்றிக் கழகம் இத்தகைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவை தொடருமேயானால் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.