ஐஐடி மெட்ராஸ், 2026-ம் ஆண்டுக்கான எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

இந்தியாவில் தரவரிசையில் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2026-27ம் கல்வியாண்டுக்கான எம்.டெக், எம்.எஸ்சி., எம்.ஏ., ஆகிய முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.பொறியியல், அறிவியல், மானுடவியல் ஆகிய முதன்மையான தொழில்நுட்பப் பாடங்களில் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர இக்கல்வி நிறுவனம் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Data Science and AI), மின்சார வாகனங்கள் (Electric Vehicles), ரோபோட்டிக்ஸ் (Robotics), செமிகண்டக்டர் பொருட்கள் தொழில்நுட்பம் (Semiconductor Materials Technology), கடல்சார் பொறியியல் (Ocean Engineering) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எம்.டெக்., படிப்புகளை ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது.இதுதவிர, ஆங்கில ஆய்வுகள் (English Studies), வளர்ச்சி ஆய்வுகள் (Development Studies), பொருளாதாரம் (Economics), பொதுக் கொள்கை (Public Policy) ஆகியவற்றில் எம்.ஏ., படிப்புகளையும், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி., படிப்புகளையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 27 ஏப்ரல் 2026 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி தகுதிகள், பாடப்பிரிவு விவரங்கள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://mtechadm.iitm.ac.in மூலம் விண்ணப்பிக்கும் முன் கவனமாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.எம்.டெக், எம்.ஏ., மாணவர் சேர்க்கை விவரங்கள், ‘கோப்’ (Common Offer Acceptance Portal) இணையதளத்தில் வெளியிடப்படும். 2026 மே இரண்டாவது வாரத்தில் முதல்சுற்று மாணவர் சேர்க்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதார்ர்கள் 2026 ஜூலையில் மாணவர் சேர்க்கைக்கு நேரில் வரவேண்டும். 27 ஜூலை 2026 அன்று வகுப்புகள் தொடங்கும்.இக்கல்வி நிறுவனத்தின் முதுகலை படிப்புகளின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் பாடப்பிரிவுகளுக்கான டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, “பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முக்கியமான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 34 விதமான எம்.டெக்., படிப்புகளை இக்கல்வி நிறுவனம் உள்ளகப் பயிற்சி (Internship) வாய்ப்புகளுடன் வழங்குகிறது. நான்கு பாடப்பிரிவுகளில் எம்.ஏ., படிப்புகளையும் வழங்குகிறோம். எம்.டெக்.கில் மொத்தம் 735 இடங்களும், எம்.ஏ.-வில் 100 இடங்களும் உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களை இப்பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்குமாறும், எங்களது புதுமையான சூழலில் இணைந்து வளர்ச்சியடையவும் அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.எம்.டெக். பாடப்பிரிவுகள் நெகிழ்வான கிரடிட் அடிப்படையிலான கட்டமைப்போடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. முக்கிய பாடங்கள், விருப்ப்ப் பாடங்கள், ப்ராஜக்ட் பணிகள் ஆகியவற்றை இப்படிப்புகள் உள்ளடக்கியிருப்பதால் மாணவ-மாணவிகள் தங்களின் கற்றல் அனுபவத்தை தங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் தொழில்துறையுடன் இணைந்த ப்ராஜக்ட்களை மேற்கொள்ளவும், நிதியுதவி பெறும் ஆராய்ச்சிகளில் பங்கேற்கவும், குறிப்பிட்ட சர்வதேச ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்புகளைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளன.2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், CGPA 8.0 மற்றும் அதற்கு மேல் உள்ள ஐஐடி பட்டதாரிகள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், QIP, பாதுகாப்புத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆகியோர் தகுதிப் பட்டியலில் அடங்குவர். எம்.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை JAM தேர்வு மூலம் நடத்தப்படும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான எம்.ஏ. மாணவர் சேர்க்கையும் ‘கேட்’ தேர்வு மூலமாகவே மேற்கொள்ளப்படும்.வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகைகள்ஐஐடி மெட்ராஸ் தனது முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்புப் பதிவைக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பைத் (Placements) தேர்ந்தெடுக்கும் அனைத்து மாணவர்களும் தங்களது படிப்பை முடித்தவுடன் புகழ்பெற்ற நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.இக்கல்வி நிறுவனத்தின் வலுவான தொழில்துறைத் தொடர்புகள், துடிப்பான ஆராய்ச்சி சூழல், தொழில்துறை ஆலோசனை, நிதியுதவி பெறும் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் ப்ராஜக்ட்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேலும் மேம்படுத்துகின்றன. தொழில்துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து ப்ராஜக்ட் பணிகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மாணவர்களின் நடைமுறை அனுபவத்தையும் தொழில்முறைத் தயார்நிலையையும் இது வலுப்படுத்துகிறது.வேலைவாய்ப்புகள் தவிர, தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவித்தொகையாக  மாதம் ரூ.12,400 நிதியுதவி வழங்கப்படுகிறது. திறமையான மாணவர்களை ஊக்குவிக்கப் பல மதிப்புமிக்க உதவித்தொகைத் திட்டங்களையும் ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது. அணுசக்தித் துறை பட்டதாரி உதவித்தொகை, ‘கேட்’ தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000 உதவித்தொகையையும், படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் அணுசக்தி நிறுவனங்களில் உறுதி செய்யப்பட்ட வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.கடல்சார் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிக்கும் 10 மாணவர்கள் வரை புவி அறிவியல் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கிறது. இந்த நிதியுதவி மட்டுமின்றி, கடல்சார் அறிவியல்- தொழில்நுட்பம் சார்ந்த முக்கியப் பிரிவுகளில் பணியாற்றும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. உதவித்தொகை மூலம் மாணவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, முக்கியத் துறைகளில் சிறப்புத் தொழில்முறை வாய்ப்புகளுக்கும் வழிவகுத்துக் கொடுக்கிறது.

ஐஐடி மெட்ராஸ், 2026-ம் ஆண்டுக்கான எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

இந்தியாவில் தரவரிசையில் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்

ஐஐடி மெட்ராஸ், 2026-ம் ஆண்டுக்கான எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

ஐஐடி மெட்ராஸ், 2026-ம் ஆண்டுக்கான எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

இந்தியாவில் தரவரிசையில் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்