கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாதுறை இயக்குனர்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலாத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரீ, இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தொல்லியல்துறை இயக்குனர் காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் 2023-24-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறையின் சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை மற்றும் உணவகங்கள், தங்கும் அறைகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அனைத்து வசதிகளும் உடனடியாக சரிசெய்வதற்கான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.பின்னர், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலுக்கு வெளியே நிற்கும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்ட யானையின் ராட்சத நாயக்கர் கால சிற்பத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு செல்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரீ, இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்