‘கடல்சார் தலைவர்களிடையே இந்தியக் கடற்படையின் களப்பணி முயற்சி’

புதுடெல்லி:
மகாசாகர் என்பது பெருங்கடலைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். இந்தப் பிராந்தியத்தில் அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் தீவிரப் பாதுகாப்புக்கான கடல்சார் தலைவர்கள் இடையே உயர்நிலைக் காணொலிக் கலந்துரையாடலுக்கான இந்தியக் கடற்படையின் களப்பணி முன்முயற்சிக்கு மகாசாகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையால் உயர்நிலைக் காணொலிக் காட்சிக் கலந்துரையாடலின்போது முதல் கட்ட மகாசாகர் நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், பங்களாதேஷ், கமோரஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், ஷெசல்ஸ், இலங்கை, தான்சானியா போன்ற இந்திப் பெருங்கடல் பகுதிகளின் கடற்படைகள் மற்றும் கடல்சார் முகமைகள் மற்றும் உயர் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் ‘பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டுக் கடல்சார் அணுகுமுறை’ ஆகும். இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் திறன்களை ஒருங்கிணைப்பதற்கும், ஒத்துழைப்பதற்கும் தற்போதைய மற்றும் அவசியமான அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள், பொதுவான கடல்சார் சவால்கள், அவற்றைக் கூட்டு ஒத்துழைப்பு முறையில் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வெளிப்படையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார், ‘பிராந்திய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக்‘ காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்