கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்த கர்நாடக அரசு

புதுடெல்லி:
கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து கடந்த ஜூலை 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ந் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டி.எம்.சி.க்கு பதிலாக 10.386 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு சென்ற 11-ந் தேதி கூட்டப்பட்டது. அதில் ஆகஸ்ட் மாதத்திற்குரிய நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து மொத்தம் 37 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், ஆணையம் இதனை ஏற்காமல், 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை மட்டும், அதாவது 15.552 டி.எம்.சி.நீரை மட்டும் திறக்கப் பரிந்துரைத்தது.
இந்த அளவு விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது. எனவே, நிலுவை நீரான 21.357 டி.எம்.சி. நீரையும், விகிதாசார அடிப்படையில் ஆகஸ்டு 12 முதல் இறுதி வரையிலான மொத்த நீரின் அளவான 37 டிஎம்சி நீரை திறக்க நாள்தோறும் 10 நாள்களுக்கு வினாடிக்கு 21.413 கனஅடி நீரை அதாவது 1.85 டிஎம்சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட