கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் மக்களுக்கு சலுகைகள்: கலெக்டர் அசத்தல்

கரூர்:
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு வெயில் தாக்கத்தினை குறைத்திடும் அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் மேற்கொண்டார்கள்.
அந்த வகையில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
மனுக்களை அளிக்க வரும் பொது மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு இலவசமாக கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கவும், கோரிக்கை மனுக்கள் எழுதும் இடத்தில் அனைவருக்கும் நீர் மோர் வழங்கவும், வரிசையில் நின்று மனு கொடுப்பவர்கள் வெயிலில் நிற்காத அளவிற்கு மேற்கூரைகள் அமைத்தும், அப்பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் மற்றும் மண் பானைகள் மூலம் குடிநீர் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளை காலதாமதம் படுத்தாமல் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதே இடத்தில் உடனுக்குடன் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, பிற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் மொத்தம் 643 கோரிக்கை மனுக்கள் வரப் பெற்றுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 84 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
பின்னர் மாற்றுதிறனாளிகள் நலத்துறைத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு காதொலி கரூவிகளும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.540 மதிப்பீட்டில் ரூ.1080 மதிப்பிலான ஊன்றுகோலும், 1 பயனாளிக்கு ரூ.7900 மதிப்பிலான சக்கர நாற்காலியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவைச்சான்றும், விதவை தொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பீட்டில் ரூ.1,20,000 மதிப்பலான தையல் இயந்திரமும், ஆக மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.159979 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, கூட்டுறவு துறை மண்டல இணைபதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.