கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

ஹாங்சோ:
ஆசிய விளையாட்டு 2023ல் இன்று நடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடி தங்கம் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இன்று வில்வித்தை போட்டி நடந்தது. வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடி, தென் கொரியாவின் சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடியை 159-&-158 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலமாக வில்வித்தையில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கமாகும்.
மற்றொரு போட்டியில் தடகள வீரர்கள் ராம் பாபூ மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் 35 கிமீ ரேஸ்வாக்கில் வெண்கல பதக்கத்தை வென்றனர் (கலப்பு அணி). இதன் மூலமாக இந்தியா 16 தங்கம் 26 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் கைப்பற்றி 71 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. சீனா, 164 தங்கம் 90 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் 300 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்திலுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்