கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்

சென்னை:
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை ஏ.ஆர்.அமீன் தனது நண்பர் பார்கவ் என்பவருடன் கோயம்பேட்டில் இருந்து காரில் வந்துள்ளார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன், அவரது நண்பர் பார்கவ், மற்றும் கால் டாக்சி டிரைவர் அனைவரும் லேசான காயங்களுடன் தப்பி உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது தமிழ் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இருவரும் சிகிச்சை முடிந்து இருவரும் வீடு திரும்பினர். எதிரில் வந்த கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீன், 2015ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பிலும் வெளிவந்த ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பாடகராக அறிமுகமானவர். பின்னர் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தில் ‘நினைவிருக்கா’ என்ற பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ படத்திலும் ‘சிக்ரி’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.