நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் AI நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு கேமரா மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாவட்டத்தின் மேலும் 10 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாமல் சென்ற பலர் சிக்கியுள்ளனர். கேமரா பொருத்தப்பட்ட முதல் நாளில் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று 2வது நாளாகவும் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டு நாட்களில் சுமார் 700க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். படிப்படியாக மாவட்டம் முழுவதும் AI தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதால், தற்போது பைக்கில் ஹெல்மட் அணிந்து செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






