குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை
சென்னை, அன்று 18 ஜூன் 2026: சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்சியாக அதிகரித்து வருவதற்கு, இணையத்தில் சுதந்திரமாக பரவும் ஆபாச தளங்களே முக்கிய காரணம் என பீம் இந்தியா தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பீம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசி மற்றும் இணையதளங்களில் கட்டுப்பாடின்றி பரவும் ஆபாச உள்ளடக்கங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“3 வயது குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலை தொடர்வது மிகப்பெரிய சமூக ஆபத்தாகும். இது சமூகத்தின் பேராபத்தாக மாறி வருகிறது” என அவர் கவலை தெரிவித்தார்.
கட்டுப்பாடற்ற முறையில் பரவும் ஆபாச வார்தைகள் மற்றும் காட்சிகள், குழந்தைகளின் மனநிலையும் சமூகத்தின் நன்னெறியையும் சீரழிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தடுக்க அவர் முன்வைத்த கோரிக்கைகள்:
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் அனைத்து ஆபாச இணையதளங்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்.
- இணையதளங்களில் பரவும் ஆபாச வார்தைகள் மற்றும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தி முறைப்படுத்த வேண்டும்.
- சமூக வலைதளங்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் மீது கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
“குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மை கடமையாகும். தமிழக அரசு இந்த விஷயத்தில் தாமதமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பீம் குமார் வலியுறுத்தியுள்ளார்







