கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா சமீபத்தில் பணியிலிருந்து விலகினார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஷர்மிளாவை நேரில் அழைத்து பேசினார். கால் டாக்ஸி பயன்பாட்டுக்காக ஷர்மிளாவுக்கு மாருதி சுசூகி எர்டிகா கார் வாங்குவதற்கான பணத்தை கமல் வழங்கினார்.







