சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் நேற்று (28.08.2023) ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்நீதிமன்ற ஆணையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடிய இடங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத இடங்களைத் தேர்வு செய்து, பின்னர் இறுதி முடிவு எடுப்பது குறித்தும், சாலையோர வியாபாரிகளுக்கான நலன்களை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இ.ஆ.ப., போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (கிழக்கு) சமே சிங் மீனா, இ.கா.ப., மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் கோ.கோபி, உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்