சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (15.08.2026) 80ஆவது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்கவிட்டார்.
தொடர்ந்து, மேயர் தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியர் மற்றும் பேண்டு, வாத்தியக்குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சஞ்சீவராயன் தெரு, புழல், கிருஷ்ணாம்பேட்டை, பூத்தப்பேடு, கோயம்பேடு மற்றும் ஜல்லடியான்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள், குரு வித்யாஷ்ரம் சிறப்புப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், வட்டாரங்கள் அளவில் உரிய காலங்களில் முறையாக தாமதமில்லாமல் சொத்துவரி செலுத்திய 3 சொத்து உரிமையாளர்களுக்கும் பாராட்டுக் கடிதங்களை மேயர் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, மாவட்ட அளவிலான சிறந்த பகுதி கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு “மணிமேகலை விருதுகள்” வழங்கிப் பாராட்டினார். சிறப்பாகப் பணியாற்றிய வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட 180 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார்.
மேலும், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர்கள் க. கற்பகம் (கல்வி), செ.சரவணன் (பணிகள்), வட்டார துணை ஆணையாளர்கள் எச்.ஆர்.கௌஷிக், (மத்தியம்), அஃதாப் ரசூல், (தெற்கு), ஸ்வேதா சுமன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் த.விசுவநாதன் (கல்வி), நே.சிற்றரசு (பணிகள்), டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி), த.இளைய அருணா (நகரமைப்பு), மண்டலக்குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) உமா மகேஸ்வரி, மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா:இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்






