சென்னையில் மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக பேசின்பிரட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கான முக்கிய சாலையில் தண்ணீர் தேங்கியதால் முற்றிலும்நிறுத்தப்பட்டுள்ளது..
இந்தநிலையில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்வே அனைத்து மறுஅறிவிப்பு வரும் வரை சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல்ர கடற்கரை திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
திருவொற்றியூர் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
வெளியூர் செல்லும் பல்வேறு ரயில்களும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்