சென்னை திருவல்லிக்கேணியில் மதுபோதையில் இளம்பெண் ரகளை

சென்னை:
சமூக ஊடகங்களில் ஒரு பெண் மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் சாலையின் நடுப்பகுதியை நோக்கி ஓடியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தனது காலால் எட்டி உதைத்தார். இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்ணின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தட்டிக்கேட்டனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணின் தலையில் பலமுறை அடித்தார். இந்த மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் வழங்கி அந்த பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட