செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், சோளிங்கர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சம்பவம் நடந்து 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் திரைப்படம் ஒன்றின் வெளியீட்டின் போது திரையரங்கிற்கு வெளியே யூடியூப் தளத்திற்காக நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் அந்த நபரைத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அங்கே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நாளிதழ் செய்தியாளர்கள் தங்களது கைபேசியில் பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர்கள் தங்களது கைபேசியில் பதிவு செய்த காட்சிகளை உடனடியாக நீக்கச் சொல்லி எம்.எல்.ஏ. தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களது கைபேசிகளையும் சேதப்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன. காயமடைந்த செய்தியாளர்கள் உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ராணிப்பேட்டை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பத்திரிகையாளர் சங்கங்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இதன் தொடர்ச்சியாக, 21 நாட்களுக்குப் பிறகு சோளிங்கர் காவல்துறையினர் தவெக எம்.எல்.ஏ கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் உட்படப் பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.