சைதாப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளில் ரூ.6.58 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மக்கள் சேவை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளிலிருந்து கழிவுநீர் நேரடியாக அடையாற்றில் கலக்காமல் தாடண்டர் நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய்கள் 1,296 மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. அரசு பண்ணையில் சாலையோர கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜோதியம்மாள் நகரில் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் அதைச் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்து குழாய் 1,221 மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3000 நபர்கள் பயனடைவார்கள்.
இதனைத் தொடர்ந்து, அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளுக்கு ரூ.49.77 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா சாலையிலிருந்து 350 மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தனர். இந்தப் பணிகளை மூன்று மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் ஜோதியம்மாள் நகரில் படிப்பகத்துடன் கூடிய நூலகக் கட்டிடம் கட்டும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இதில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், தலைமைப் பொறியாளர், மண்டல அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.