ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய