டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் , தமிழக கடலில் கனிம சுரங்கம் தோண்ட அனுமதி கையெழுத்து போட்டது ஏன்..!?


மதுரை பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். மக்கள் எதிர்ப்பை அடுத்து அனைத்து கட்சிகளும் டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகிறது.
ஆரம்பத்தில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக அரசு, மக்களின் எதிர்ப்பு எடுத்து டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என ஆங்காங்கே அமைச்சர்கள் மக்களை சந்தித்து சமாதானம் செய்து வருகிறார்கள். இதிலும் ஒருபடி மேலே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான் இருக்கும் வரை டென்ஷன் தனத்தை இத்திட்டத்தை வரவிடமாட்டேன் என சட்டப்பேரவையில் உறுதியளிக்கிறார்.
இதே முதலமைச்சர் தான் தமிழக கடலில் கனிம சுரங்கம் தோண்ட அனுமதி அளித்துள்ளார். அதுமட்டுமல்ல தமிழக கடலில் கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை 30,000 கோடியில் கடலில் காற்றாலை திட்டம், கடலில் ஹைட்ரோ கார்பன், கடலில் மீத்தேன் சுரங்கம் மற்றும் கடற்கரையில் கனிம சுரங்கம் ஆகியவற்றிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கையெழுத்து போட்டு அனுமதி அளித்துள்ளார்.டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தால் சமவெளியில் சில கிலோமீட்டர்கள் தூரத்திற்கு தான் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் கடலில் கனிம சுரங்கம் தோண்டினால் பல 100 கிலோமீட்டர் தமிழக கடல்வளம் முழுவதும் அழித்துவிடும். இதனால் கடலில் சுற்றுச்சூழல் முழுவதும் பாதிப்படையும், கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். கடலை நம்பி வாழும் 60 லட்சம் மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும். கடலில் சுற்றுச்சூழல் சமன்பாடு சிதைக்கப்படும்போது இயற்கை பேரழிவு என்பது தடுக்க முடியாமல் போய்விடும்.
டங்ஸ்டன் சுரங்கம் சமவெளி மக்களின் வாழ்வியலை பாதிக்கும் என்றவுடன் இந்தத் திட்டத்தை தடுக்க முனைப்புடன் செயல்படும் முதல்வர். கடலில் கனிம சுரங்கம் காற்றாலை மீத்தேன் ஹைட்ரோ கார்பன் மற்றும் கடற்கரை கனிம சுரங்கம் ஆகிய திட்டங்களால் கடற்கரையை ஒட்டி வாழும் 60 லட்சம் மீனவ சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஏன் எண்ணிப் பார்க்கவில்லை.முதலமைச்சர் மீனவ சமுதாயத்தை இரண்டாம் தர குடிமக்களாக எண்ணி புறக்கணிக்கிறாரா..!? மீனவ சமுதாய மக்கள் தமிழக மக்கள் இல்லையா..!? கடற்கரையை ஒட்டிய 40 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கு அதிகமாக உங்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுத்த மீனவ சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா..!? ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கனிம சுரங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையில் கடலில் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பி உள்ளன.
எனவே வேதாந்தா குழுமம் போன்ற நாசக்கார கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தமிழக அரசு தமிழக கடலில் அனுமதி அளித்துள்ள பல நாசகார திட்டங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டம் என்ற சொத்தை காரணங்களை சொல்லி முதலமைச்சர் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது. தவறும்பட்சத்தில் மீனவர்கள் சார்பில் வெகுஜன போராட்டம் முன்னெடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் , தமிழக கடலில் கனிம சுரங்கம் தோண்ட அனுமதி கையெழுத்து போட்டது ஏன்..!?

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்