டாஸ்மாக் மூலம் 2022-23-ம் ஆண்டில் ரூ.44,000 கோடி வருவாய்

சென்னை:

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று அழைக்கப்படும் என்று டாஸ்மாக் மூலம் தமிழகத்தில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 5,329 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், 2022-2023-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவை மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,050 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.8,000 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்