தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கால வரம்பை ஒரு வாரம் நீட்டித்து, திருத்தப்பட்ட அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணை பின்வருமாறு:
- கணக்கெடுப்பு காலம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள் – 11.12.2025 (வியாழக்கிழமை)
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 16.12.2025 (செவ்வாய்க்கிழமை)
- உரிமைகோரல்கள், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலம் – 16.12.2025 (செவ்வாய்) முதல் 15.01.2026 (வியாழக்கிழமை) வரை
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 14.02.2026 (சனிக்கிழமை)