தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது

கடந்த 3 ஆண்டுகளில் (ஜூலை 2023 முதல் ஜூன் 2026 வரை), இந்தியா 12 செலுத்துவாகனத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 11 தேசிய செயற்கைக்கோள்களையும், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான 9 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இக்காலகட்டத்தில் எட்டப்பட்ட சில குறிப்பிடத்தக்க மைல்கற்கள் பின்வருமாறு:

விண்வெளித் துறை இதுவரை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி,  ஜிஎஸ்எல்வி எம்கேIII, எஸ்எஸ்எல்வி ஆகிய நான்கு செலுத்துவாகனங்களை உருவாக்கி செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இவை, புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வழிகாட்டுதல், விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கான செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கும், தேசிய/சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான வணிக ரீதியான செலுத்தும் சேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளுக்காக ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கவும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திற்கு மாற்று ஏவுதளமாக செயல்படவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் உள்ள எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஏவுதள வளாகமும் , தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின்  ராக்கெட்டுகளுடன் சிறிய செயற்கைக்கோள் ராக்கெட்டுகளுக்கும் இடமளிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளம், வரவிருக்கும் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மற்றும் எஸ்எஸ்எல்வி ஏவுதளம் ஆகியவற்றுடன் இணைந்து போதுமான செலுத்து திறனை வழங்குகின்றன.

மேலும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்துவதற்காக IN-SPACe ஒரு மூலோபாய செயல் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2033-ம் ஆண்டுக்குள் 44 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &