தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:
தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட 6 பேருக்​கு ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது.
தமி​ழ​கத்​தில் தவெக அரசைக் கவிழ்க்​கும் நோக்​கில் சட்​டப்​பேர​வை​யில், பேர​வைத் தலை​வ​ருக்கு எதி​ராக கொண்டு வரும் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக செயல்​பட்​டால் ரூ.35 கோடி அன்​பளிப்​பாகத் தரு​வ​தாகக் கூறி ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது.
அதன் அடிப்​படை​யில் சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​சார் வழக்​குப் பதிவு செய்து அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த யூ-டியூபர் திரு​நாவுக்​கரசு, திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ், மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த தியாக​ராஜன், கார்த்​திக், ரமேஷ் உள்​ளிட்ட 14 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகி​யோர் நிபந்​தனை முன்​ஜாமீன் பெற்று தின​மும் கையெழுத்​திட்டு வரு​கின்​ற​னர்.
இந்த வழக்​கில் ஜாமீன் பெற்ற ரமேஷ் என்​பவர், வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்​றக் கோரி ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள், சிபிஐ தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மேலும், ரமேஷ் மீதான வழக்கை விசா​ரிக்​கக் கூடாது என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது.
இந்த வழக்​கில் சமீபத்​தில் ஜாமீன் பெற்ற சேது​ராஜ் மற்​றும் கார்த்​திக் ஆகி​யோ​ரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்​றக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இந்த மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகி​யோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடந்​தது.
அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில், ‘‘கு​திரை பேர வழக்​கில் மாநில போலீ​சாரின் விசா​ரணை​யில் நம்​பிக்கை இல்​லை. போலீ​சார் அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் செயல்​படு​கின்​ற​னர். எனவே. இந்த வழக்கை சிபிஐ அல்​லது வேறு விசா​ரணை அமைப்​புக்கு மாற்ற வேண்​டும்’’ என்று வாதிடப்​பட்​டது.
அப்​போது காவல் துறை தரப்​பில், ‘‘இந்த விவ​காரத்​தில் பொய் வழக்கு ஜோடிக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை. ஆட்​சி​யைக் கவிழ்க்​கும் நோக்​கில் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​டதற்​கான ஆதா​ரங்​கள் சேகரிக்​கப்​பட்​டுள்​ளன. புலன் விசா​ரணை ஆரம்ப கட்​டத்​தில் உள்​ளது’’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.
அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் ஒவ்​வொரு​வ​ராக சிபிஐ விசா​ரணை கோரி மனு தாக்​கல் செய்து வரு​கின்​ற​னர். எனவே, திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் நடை​பெற்று வரும் இந்த வழக்​கின் ஒட்​டுமொத்த விசா​ரணைக்​கும் இடைக்​காலத் தடை விதிக்​கி​றோம் என்று உத்​தர​விட்​டனர். அத்​துடன் அடுத்த விசா​ரணையை ஆக.27-ம் தேதிக்கு தள்ளி வைத்​தனர்.
இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் உள்ள திரு​நாவுக்​கரசு, ராஜேஷ், தியாக​ராஜன், கணேசன், சீனி​வாசன், செல்​வம் ஆகிய 6 பேருக்கு ஜாமீன் கோரி​யும், தீபக், செல்​வரங்க முரு​கன், அழகேசன், சக்​திவேல் ஆகிய 4 பேர் தங்​களுக்கு முன்​ஜாமீன் கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.
இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், சிறை​யில் உள்ள திரு​நாவுக்​கரசு உள்​ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்​கி​யும், தீபக் உள்​ளிட்ட 4 பேருக்கு முன்​ஜாமீன் வழங்​கி​யும் உத்​தர​விட்​டுள்​ளார். இந்த வழக்​கில் ஏற்​கெனவே பலருக்கு ஜாமீன் வழங்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்