‘திராவிட மாடல்’ வெரும் அரசியல் முழக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

திராவிட மாடல் ஆட்சி வெறும் அரசியல் முழுக்கமே. காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரத கொள்கைக்கு எதிரானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் இந்நிலையில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார்.

ஆங்கில ஊடகத்திற்கு ஆளுனர் அளித்தப் பேட்டியில், “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் முழக்கம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது.

தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என்றும் அவரிடம் நானும் என்னிடம் அவரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.
ஆனால், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் எப்படி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். தமிழ்நாடு மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன் அல்லவா?

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி பொய்யுரைத்துவிட்டார். அவர் பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று கூறினார். அந்த பதம் 2000ஆம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது.

ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. ஆனால் அதற்கென வரம்பு இல்லை என்றே நிதிக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆளுநரின் விருப்புரிமைக்கு கட்டுப்பாடில்லை. அதனால் பெட்டி கிரான்ட்டில் வரம்பு மீறல் என்பதே அப்பட்டமான பொய்” என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில், அதாவது ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை செலவுகள் மற்றும் விருப்புரிமை நிதி என்ற வகையில் நிதி ஒதுக்கப்படுகிறது. பெட்டி கிரான்ட் என்பது, அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இந்த நிதி, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி, திருமண உதவி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நிதியில் விதிகள் மீறப்பட்டுள்ளன. `அட்சய பாத்திரா’ என்ற நிறுவனத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வேறு செலவுகளுக்கும் இந்நிதி மாற்றப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதனை ஆளுநர் தற்போது மறுத்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.