குறள் 16: “விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே…”
குறள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.
- பொதுவான பொருள்: வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் ஒழிய, உலகில் ஒரு பசும்புல்லின் நுனியைக் கூடக் காண்பது அரிது.
- திருமுறை விளக்கம்:: வானிலிருந்து மழை பொழிந்தால் அன்றி உலகில் ஓரறிவு உயிர் கூடத் தலைதூக்க இயலாது. அதாவது, அனைத்து உயிர்களையும் வாழ வைப்பது “விசும்பின் துளியாகிய பரிசுத்த ஆவியே” ஆகும்.







