திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அம்பாசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது 42), ஆலங்குளம், நெட்டூரைச் சேர்ந்த கருப்பசாமி (35), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (20) மற்றும் கி.மருதப்பபுரத்தைச் சேர்ந்த செல்வம் (20) ஆகிய 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கால்கரை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், கால்கரையைச் சேர்ந்த முருகன்(24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு(22) மற்றும் கணேஷ் அரவிந்த்(21) ஆகிய 3 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் மூலம் ஒரே நாளில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் மொத்தம் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க, எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி அறிவுறுத்தலின்பேரில், போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.