திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம் வந்தவர். இவர் மீது திருநின்றவூர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜோசப்புக்கும், திருநின்றவூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலரான விசிகவைச் சேர்ந்த கோமதி (28)-க்கும் நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் பலமுறை கண்டித்துள்ளார். இதனை கோமதி கேட்காததால் கோபமடைந்த ஸ்டீபன் ராஜ் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் கோமதியை கத்தியால் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்டீபன் ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி அஜித், உறவினர் ஜான்சன் என்கிற அந்தோணி ராஜ் ஆகிய 3 பேரை திருநின்றவூர் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், ரவுடி ஜோசப் வழக்கு தொடர்பாக கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்டீபன் ராஜ், தன் மனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த ஜோசப்பை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இந்தத் தகவல், திருவள்ளூர் எஸ்.பி. சாய் பிரணீத்துக்கு தெரிய வந்ததையடுத்து, அவரது உத்தரவின்ன பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடி ஜோசப்பை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய முடிவு செய்து ஓர் ஆட்டோவில் ஸ்டீபன் ராஜ், அவரது உறவினர்கள், நண்பர்கள் என 6 பேர் பட்டாக் கத்திகளுடன் அங்கு காத்திருந்தனர்.
ஆனால், ரவுடி ஜோசப் மதியம் நீண்ட நேரமாகியும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வராததால் 6 பேர் கும்பல் திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூர் பகுதியில் மது அருந்திக் சென்றனர். அப்போது, தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 4 பேர் தப்பியோடிய நிலையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (45), பிரபாகரன் (34) ஆகிய இருவர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 6 அரிவாள்கள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசாரிடம் சிக்கிய 2 பேரும் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அசோக்குமார் (45), பிரபாகரன் (34) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்டீபன் ராஜ் (33), திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தவசி (24), சுமன் (29), ஜான்சன் என்கிற அந்தோணி ராஜ் (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்