தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த முதலீடு நம் மாநிலத்தை விட்டு கைநழுவிப் போகும் அச்சமான சூழல் உருவாகியுள்ளது என்றும், 1990-களிலிருந்தே தமிழகத்தில் தொழில் முதலீடு செய்து வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போது மற்றொரு மாநிலத்தை நாடுவது என்பது இன்றைய தவெக அரசு முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்பதையே காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார். இதற்கு மூலக்காரணம், ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு தொடங்கிய ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance TamilNadu) நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல் அதன் செயல்பாடுகளை மழுங்கடிப்பதுதான் என்றும், அந்நிறுவனத்திலிருந்து 10 அதிகாரிகள் வரை பதவி விலகியிருப்பது முதலீடுகளைப் பாதிக்கும் என்பதை இந்த அரசு உணரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர், தொழில் துறை அமைச்சரின் முதிர்ச்சியற்ற போக்குகளை விமர்சித்ததுடன், உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி (FastTrack) அவர்களின் முதலீட்டைத் தமிழகத்தில் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி






