தேசிய தொலைபேசி எண்ணை மாற்றியமைக்கும் திட்டத்திற்கான பரிந்துரையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது

தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பது தொடர்பான தேசிய திட்டத்திற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தொலைபேசி பயனாளர்கள், சேவை வழங்குநர்கள், கட்டமைப்பு கூறுகள், சாதனங்கள் மற்றும் அங்கீகார நிறுவனம் ஆகியவை குறித்த தனித்துவ அடையாளத்தைப் பயன்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு அடையாள குறியீடுகளின் அவசியத்தை இந்தப் பரிந்துரை குறிப்பிடுகிறது.  தற்போது டிஜிட்டல் முறையிலான ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகள் மூலம் லட்சக்கணக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அனைவராலும் அணுகக் கூடிய வகையில் நம்பகத்தன்மையுடன் கூடிய தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் இந்த தொலைப் பேசி எண்களுக்கான நடைமுறைகள் வகுக்கப்படும். நிலையான தொலைபேசி எண்களுக்கான ஆதார வளங்களை  போதிய அளவு கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். நிலையான தொலைத்தொடர்பு வசதிக்கான எண்கள் திட்டத்தை ஆய்வு செய்யும் வகையிலும் ஆலோசனை வழங்கும் வகையிலும் பரிந்துரைகளை அளிக்குமாறு தொலைத்தொடர்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து தொலைபேசி எண்ணை மாற்றுவதற்கான தேசிய திட்டம் குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்தின் இணையதளத்தில் இந்தத் திருத்தம் தொடர்பான நேர்மறைக் கருத்துக்கள் மற்றும் எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம்தேதி நடைபெற்ற வெளிப்படையான ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 60 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு